Saturday 30 May 2015

பெரியார் அம்பேத்கார் அமைப்புக்குத் தடை: 100க் கணக்கானோர் கைது!!


ஐஐடி மெட்ராஸ் ஐஐடி-யில் ஏ.பி.எஸ்.சி (பெரியார் அம்பேத்கார் மாணவர் படிப்பு வட்டம்) என்ற அமைப்பை தடை செய்ததற்கு எதிராக ஐஐடி நுழைவு வாயில் முன் நூற்றுக் கணக்கான மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு, உள்ளிட்ட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், வாகன நெரிசல் ஏற்பட்டது. அனுமதியின்றி போராட்டத்தில் இறங்கியதனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனால், மாணவர்கள் போலீஸாருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதை அடுத்து, மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.


நேற்று சென்னை ஐஐடி-யில் ஏ.பி.எஸ்.சி (பெரியார் அம்பேத்கார் மாணவர் படிப்பு வட்டம்) என்ற அமைப்பை தடை செய்தது. ஐஐடி தலைமைக்கு, ஏ.பி.எஸ்.சி அமைப்பு இந்துத்துவத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கொள்கைகளைப் பரப்புவதாக வந்த ரகசிய புகார் ஒன்று வந்தது.
மேலும், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை ஐஐடி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தது. இவற்றின் அடிப்படையில், பெரியார் அம்பேத்கர் அமைப்பான ஏ.பி.எஸ்.சி அமைப்பை தடை விதித்து உத்தரவிட்டது ஐஐடி தலைமை.


இந்த தடையை அடுத்து, புது தில்லியில் உள்ள மத்திய அமைச்சர் ஸ்மிர்த்தி இராணி வீட்டின் முன் இந்திய ஜனநாயக இளைஞர் அமைப்பினர் போராடம் நடத்தினர். இவர்களுடன் காங்கிரஸ் இளைஞர் அணியினரும் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

No comments:

Post a Comment