Tuesday 26 May 2015

போலீஸை ஷூலேஸ் கட்ட வைத்த அமைச்சர்: குதறும் எதிர்கட்சிகள்!! (வீடியோ)


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது காலில் ஷூவை அணிவித்து, ஷூவுக்கு லேஸ் கட்டுமாறு தன்னுடன் பாதுகாப்புக்கு வந்த காவலரை உத்தரவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதால் இவ்விவகாரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, மேற்கு வங்கத்தின் பிரபல சிற்பியும் ஓவியக் கலைஞருமான ராம்கின்கர் பெய்ஜ் அவர்களின் பிறந்த நாள் விழா மேற்குவங்கத் தலைமை செயலகத்தில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் மேற்கு வங்க அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். நேற்று மேற்கு வங்க மேற்கு வங்கத்தின், திட்ட அமைச்சராக பணியாற்றி வரும் ராச்பால் சிங் அவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.


இவருடன் பாதுகாப்பிற்குகாக போலீஸ் அதிகாரி ஒருவரும் வந்திருந்தார். விழா நடந்த அறையினுள் சிங் செல்லும் போது, அவரது ஷூவை கழற்றி விட்டுச் சென்றார். விழா முடிந்த வந்த ராச்பால் சிங், ஷூ அணியும் போது, அவருக்கு பாதுகாவலராக வந்த போலீஸ்காரர், அவர் முன் மண்டியிட்டு, ஷூ அணிய உதவி செய்ததுடன், ஷூ லேசையும் கட்டியுள்ளார். இந்த காடி அருகில் இருந்த ஒருவரால் படமாக்கப்பட்டு ஊடகங்களில் வெளியானது.
அமைச்சர் உத்தரவின் பேரால் தான் காவலர் ஷூலேசை கட்டினார் என்று கூறப்படுகிறது. காவலர் ஒருவரை இழிவு படுத்தும் விதமாக அமைச்சரின் இந்தச் செயல் அமைந்துள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க., எம்.எல்.ஏ., ஷமிக் பட்டாச்சார்யா தெரிவிக்கையில், இது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் அடிமைப்படுத்தி ஆளும் மணப்பாங்கை காட்டுகிறது என்றார்.


மேலும், திரிணாமுல் மக்களுக்கு சேவை செய்யவில்லை, மக்களை கட்டி ஆளுகிறது என்றும் விமர்சித்தார். இதை அடுத்து இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
1974ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வந்த ராச்பால் சிங், பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார். ஆரம்பத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ கீழே உள்ளது


No comments:

Post a Comment