Thursday 28 May 2015

ஒவ்வொரு கணவர்மார்களும் இதை செய்ய முன் வரவேண்டும்..! சூர்யா


கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘36 வயதினிலே'. இப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும்ம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ஹவ் வோல்ட் ஆர் யூ’ படத்தின் ரீமேக் படமான இப்படத்தை ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் மூலம் சூர்யா தயாரித்திருக்கிறார்.ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜோதிகாசூர்யா, இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா பேசும்போது, தற்போது எனது கணவர் தயாரிப்பில் நடித்துள்ளேன். இது தவிர நல்ல கதை அமைந்தால் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களிலும் நடிக்க தயாராக உள்ளேன். எனக்கு கணவர் சூர்யா உதவியாக இருக்கிறார். என்னை உற்சாகப்படுத்துகிறார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை வரும். அதை கடவுள்தான் கொடுப்பார். அப்படி எனக்கு கொடுத்த வாழ்க்கை இது. கடவுள் எனக்கு கொடுத்த வரம், என் கணவர் சூர்யா என்றார்.
சூர்யா பேசும்போது, ‘36 வயதினிலே' படத்தில் ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கும் ரகுமான் கதாபாத்திரம் போல் நிஜவாழ்க்கையில் கணவர்கள் வாழக்கூடாது. தனது மனைவியின் ஆசைகளை கணவர் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும். அவர்களின் ஆசையை நிறைவேற்ற கணவர்கள் முன்வர வேண்டும்.
திருமணமாக கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகுதான் ஜோதிகா நடித்திருக்கிறார். ஆரம்பத்திலேயே நடிக்கவேண்டும் என்ற ஆசை அவருக்குள்ளும் இருந்துள்ளது.
ஆனால், அதை வெளிப்படையாக என்னிடம் கூற முடியாமல் தவித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அவருடைய ஆசையைத் தெரிந்துகொண்ட நான் அவரை வைத்து படம் எடுக்க முன்வந்தேன். இதேபோல், ஒவ்வொரு கணவர்மார்களும் தனது மனைவியின் ஆசைகளை தெரிந்துகொண்டு, அதை நிறைவேற்ற முன்வரவேண்டும்," என்றார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில், அகரம் பவுண்டேசன் சார்பாக திருமணமாகி வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் 25 பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு தேவையான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment