Monday 25 May 2015

ரஜினி முருகனில் திடீர் திருப்பம்..!


காக்கி சட்டை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘ரஜினி முருகன்’. பொன்ராம் இயக்கிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் சூரியும் நடித்துள்ளார்.
லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்து வருகிறார். இமான் இசையில் இப்படத்திற்காக ‘என்னமா இப்படி பண்றீங்களேமா…’ என்ற ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலை ஜூன் 7-ஆம் தேதி மதுரையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர் ‘ரஜினி முருகன்’ படக்குழுவினர். ஆனால் இப்போது திடீர் திருப்பமாக அந்த பாடலை இம்மாதம் 29-ஆம் தேதி சிங்கப்பூர் சன் டெக் சிட்டியில் நடைபெறவிருக்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதனை ‘ரஜினி முருகன்’ படத்தை தயாரிக்கும் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமே தெரிவித்துள்ளது. மேலும் படம் வரும் ஜூலை 17 ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment