Tuesday 26 May 2015

மோடி ஆட்சிக்கு வந்து 1 ஆண்டு ஓவர்: மார்க் போட்ட ஊடகங்கள்!!


மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவுற்றது. இந்த ஓராண்டுக் கொண்டாட்டத்தை மோடி மதுராவில் விழாவாக நடத்தினார்.
அதை அடுத்து இன்று, இந்திய மக்களுக்கு தம் ஓராண்டு ஆட்சி குறித்து திறந்த மடல் வெளியிட்டார். இந்நிலையில், மோடியின் ஆட்சியில் செய்தது என்ன, செய்யாதது என்ன என்பதைப் பட்டியலிட்டு, மத்திய அரசின் ஆட்சிக்கு மார்க் போட்டு வருகின்றன ஊடகங்கள்.
எந்தெந்த ஊடகங்கள் மோடி ஆட்சிக்கு என்ன ரேடிங் கொடுத்துள்ளன என்பது குறித்த தொகுப்பு..


டைம்ஸ்
செயல்பாட்டு அடிப்படையில் நாங்கள் மோடி அரசுக்கு 77.5 சதவீத மார்க் அளித்துள்ளோம். உண்மையில் இது நல்ல மார்க் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த அரசின் ஆரம்பம் நன்றாக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்த ஆரம்பத்தை தொடர்ந்து செயல்பாட்டுக்கு வர வேண்டியது அரசின் பொறுப்பு.
உதாரணமாக, இளைஞர்களின் திறன்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவானால் தான் இதை நம்ப முடியும். சில சங்பரிவார் தலைவர்கள், சமூக நல்லிணக்கத்திற்கு விரோதமாக பேசுவதை கண்டிக்கிறார். இதே போல, நாட்டின் ஒற்றுமைக்கு ஏற்படும் குந்தகங்களை அவர் தடுக்க வேண்டும்.
முக்கிய சாதனைகளுக்கு கொடுக்கப்பட்ட மார்க்:
1. தலைமைப் பண்பை நிலைநிறுத்தி, நிர்வாகத்தை ஸ்திரப்படுத்தியது - 9
2. பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தது; வர்த்தகம் செய்ய ஏற்ற சூழ்நிலைமை உருவாக்கியது - 7.5
3. ஊழலை கட்டுப்படுத்தி, கறுப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தது - 9
4. வெளிநாடுகளில் இந்தியாவின் இமேஜை உயர்த்தியது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களை ஆதரவாக பயன்படுத்தியது - 9
5. மருத்துவம், சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிப்பது - 6.5
6. நிதி ஸ்திரத்தன்மை, பாதுகாப்பை மேம்படுத்தியது - 8
7. மாநிலங்களுக்கு இடையே நிலவும் உறவுகளை மேம்படுத்தியது - 8
8. ராணுவத்தை வலுப்படுத்தியது - 8
9. சிரமத்தில் இருக்கும் வேளாண்மை துறையை மீண்டும் கவனிக்கத் தொடங்கியது - 5.5
10. அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்தது - 7
ஆக மொத்தம் 77.5/100 இது தான் டைம்ஸ் ஆப் இந்தியா கொடுத்த மதிப்பெண்.


ஐபிஎன்
சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி பார்வையாளர்கள், மோடி அரசுக்கு 72 சதவீத மதிப்பெண் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது.
இந்தியா டுடே
இந்தியா டுடே பத்திரிகை நடத்திய சர்வேயில், 56 சதவீத வாசகர்கள், மோடி அரசு நன்கு செயல்படுவதாக மதிப்பெண் கொடுத்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட பாதிப்பேர், மோடி அரசை ரசிக்கவில்லை என அர்த்தம்.


No comments:

Post a Comment