மே 23
மிக்கி மவுஸின் முதல் படம் வெளியானது!!
வால்ட் டிஸ்னி, முதலில் ‘ஆஸ்வால்ட் த லக்கி ரேபிட்’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார். அதன் வருமானத்தில் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ உருவாக்க வேண்டும் என்பது அவர் திட்டம். ஆனால், அதன் உரிமை டிஸ்னியின் கையைவிட்டுப் போனது. அதன் பிறகு, அவர் உருவாக்கிய கார்ட்டூன் கதாபாத்திரம்தான், மிக்கி மவுஸ்.
முதல் உலகப் போரின்போது கட்டாய ராணுவச் சேவையில், ஆம்புலன்ஸ் ஓட்டும் பணியில் இருந்தார் டிஸ்னி. அந்த ஆம்புலன்ஸில் விலங்குகளின் படங்கள் வரையப்பட்டிருந்தன. அதைப் பார்த்து ஓவியம் வரையத் தொடங்கினார். இவர் சாப்பிட்டு மீதம் போடும் உணவை உண்பதற்காக, சில எலிகள் இவரது வீட்டில் சுற்றிக்கொண்டிருந்தன. அதில் ஒரு எலி, வால்ட் டிஸ்னியின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. அதுதான் டிஸ்னியின் கற்பனையில், சாகச எலியாக மாறியது.
தனது நண்பர் உப் ஐவெர்க்ஸ் உடன் இணைந்து, அந்த எலிக்கு ‘மார்டிமர் மவுஸ்’ என்று பெயர் வைத்தார். ஆனால், டிஸ்னியின் மனைவி லில்லியனுக்கு இந்தப் பெயர் பிடிக்கவில்லை. அவர் மாற்றிவைத்த பெயர்தான், மிக்கி மவுஸ். சில படங்களில், மிக்கி மவுஸின் எதிரி கதாபாத்திரத்துக்கு மார்டிமர் மவுஸ் பெயரைச் சூட்டினார் டிஸ்னி.
இதன் முதல் கார்டூன் படமான ‘கார்னிவல் கிட்’ திரைப்படம் 1929ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி வெளியானது. தொடக்கத்தில் கறுப்பு வெள்ளையில் வெளியான மிக்கி மவுஸ் படங்கள், ’த பேண்ட் கான்சர்ட்’ படத்திலிருந்து வண்ணத்துக்கு மாறியது. பிறகு, 1940-ம் ஆண்டு முழு நீளத் திரைப்படங்களில் தோன்ற ஆரம்பித்த மிக்கி மவுஸ், ஒன்பது முறை ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, ஒரு முறை ஆஸ்கர் விருதையும் வென்றது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1568 – நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1805 – நெப்போலியன் இத்தாலியின் மன்னாக முடி சூடினான்.
1949 – ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு உருவானது.
சிறப்பு நாள்:
உலக ஆமை தினம்.







No comments:
Post a Comment