Friday, 22 May 2015

ஃபேஸ்புக்கிலும் அறிமுகமான வீடியோ கால் வசதி!!


ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெஸ்சஞ்சர் அப்ளிகேஷனில் வீடியோ கால் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெருகிவரும் இன்றைய டிஜிட்டல் தலைமுறையில் வீடியோ காலிங் வசதி பெருகிவருகிறது. இந்நிலையில் தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஃபேஸ்புக் மெஸ்சஞ்சர் அப்ளிகேஷனில் வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக்கினை தற்போது 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனபடுத்தி வருகின்றனர். இதனால், அதில் வீடியோ காலிங் செய்யும் வசதியை அளிப்பதன் மூலம் இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களை பெறலாம் என்பதன் முயற்சியாக ஃபேஸ்புக் காலிங்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
விரைவில் ஐஓஸ் மற்றும் ஆண்டிராய்டு இயங்குதளங்களுக்கு இதற்கான அப்டேட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஏற்கனவே 18 நாடுகளில் சென்ற மாதமே அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment