ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூர் அணியை 3விக்கட்டுக்களால் தோற்கடித்து இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது, ஆட்டத்தில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய பெங்களூர் அணியின் ஆரம்பத் ஆட்டக்காரரான கிறிஸ் கெயிலும் விராத் கோலியும் ஆடினர். இதில் அணித்தலைவர் கோலி (12) ரன்களையும், அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் (1) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில் இன்னும்மொரு ஆரம்பத் ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் மிகச் சிறப்பாக ஆடி (41) ரன்களில் (2பவுண்டரி, 3சிக்ஸர்) என எடுத்து ஆட்டமிழந்தார் அதன் பின்னர் களமிறங்கிய அதிக விலைக்கு எடுக்கப்பட்டவரான தினேஷ் கார்த்திக் (28) ரன்களையும், அடுத்ததாக களமிறங்கிய சாப்ராஸ்கான் (31) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆட்ட நேர முடிவில் பெங்களூர் அணி 20 ஒவர்களில் 8விக்கட்டை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது.
சென்னை அணியின் பந்துவீச்சு சார்பில் ஆஷிஸ் நெய்ரா 3விக்கட்டுக்களையும், அஸ்வின், மொஹித் சர்மா, ரெய்னா, பிரோவோ ஆகியோர் தலா 1விக்கட்டுக்களை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 140 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் ஆரம்பத் ஆட்டக்காரரான டுவைன் ஸ்மித்தும், மைக் ஹசியும் ஆடினர். இதில் டுவைன் ஸ்மித் (17) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய டூபிளசிஸ் மைக் ஹசியுடன் ஜோடி சேர்ந்து மிக நிதானமாக ஆடி ரன்களை எடுத்தனர்.
இதில் டூபிளசிஸ் (21) ரன்களில் ஆட்டமிழந்தார் இந்த இக்காட்டான சூழ் நிலையில் மிகச் சிறப்பாக ஆடிய ஹசி அரைச் சதம் தாண்டி (56) ரன்களில் (3பவுண்டரி, 2சிக்ஸர்) என எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் தோனி மிக நிதானமாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார். கடைசியில்சென்னை அணி 19.5 ஒவர்களில் 7விக்கட்டை இழந்து 140 ரன்களை எடுத்து வெற்றியை பெற்றது.
பெங்களூர் அணியின் பந்துவீச்சு சார்பில் யுவேந்திர சாகல் 2விக்கட்டுக்களையும், மிச்செல் ஸ்டார், எஸ்.அரவிந்த், ஹர்ஷார் படேல் , டேவி வீஸ், ஆகியோர் தலா 1விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை அணி 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நேற்றயை போட்டியில் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் மிக சிறப்பாக 3விக்கட்டுக்களை கைப்பற்றிய நெய்ரா தேர்வு செய்யப்பட்டார்.







No comments:
Post a Comment