Friday, 22 May 2015

கோலா விளம்பரத்துக்கு ’நோ சொன்ன சிவா..? அவர் என்ன விஜய்யா என்ற ரசிகர்கள்..?


தமிழ் சினிமாவில் ஒரு இரண்டு படங்கள் ஹிட் கொடுத்தாலே அந்த நடிகரை தேடி ஈ மெய்பார்கள் விளம்பர நிறுவனத்தினர். தங்களது கம்பெனி பிராண்டை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதால் திரையுலகில் மார்கெட்டில் இருக்கும் ஹீரோவை பிடித்து தங்கள் விளம்பரத்தில் நடிக்க வைக்கின்றனர்.
ஆனால் எந்த மாதிரியான விளம்பரத்தில் நாம் நடிக்கிறோம் என்பதில் சில ஹீரோக்கள் கவனம் செலுத்துவதில்லை. அதனால் சில பிரச்சினைகளில் மாட்டிக்கொள்கிறார்கள். உதாரணமாக நடிகர் விஜய்யை சொல்லலாம்.
நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன்பு கொக்க கோலா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்ததுடன், பெரும் தொகை பெற்றுக் கொண்டு அந்த விளம்பரத்திலும் நடித்தார். ஆனால் அவர் நடித்த கத்தி படத்தில் கோலா நிறுவனம் தனது கிராமத்தில் உள்ள நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராடுகிறார். இதனால் அவரை டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.
இதனால் மற்ற நடிகர்களை போல் இல்லாமல் எந்த மாதிரியான விளம்பரத்தில் நடிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் கோலா நிறுவனம் தங்களின் விளம்பர படத்தில் நடிக்குமாறு சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளனர். ஆனால் கோலா பானங்களில் விஷத்தன்மை உள்ளதால் அதை மற்றவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன்.
இதுபோன்ற நம்பகத்தன்மையற்ற பொருளின் விளம்பரங்களில் நடிக்க எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டாராம் சிவகார்த்திகேயன். இதனால் சில ரசிகர்கள் அவர் என்ன விஜய்யா என்று கிண்டல் அடித்து வருகின்றனர். கோலா விளம்பரத்தில் நடித்ததை நினைத்து விஜய்யே மனம் வருந்திய பிறகு மீண்டும் அவரை துன்புறுத்துவது தேவையில்லாத ஒன்றாகும்.

No comments:

Post a Comment