Friday, 22 May 2015

அமீர்கானை இயக்கும் பிரமாண்டம்...?


தமிழில் இயக்குநர் ஷங்கரைப் போல தெலுங்கில் பிரமாண்டமாக படங்களை எடுத்து மிரட்டக் கூடியவர் இயக்குநர் ’ராஜமௌலி’. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள சரித்திரப் படம் ’பாகுபலி’.
இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதில் ‘பிரபாஸ்’, ’அனுஷ்கா’, ’ராணா’, ’தமன்னா’, ’சுதீப்’, ’சத்யராஜ்’ உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆந்திரா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.
பாகுபலிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலிக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் கிடைக்குமென்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக அவருக்கு ஹாலிவுட் அல்லது பாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. அதன் முதல் படியாக தான் அமீர்கானை வைத்து ராஜமெளலி ஒரு படம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
பாகுபலி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் வாங்கி உள்ளார். அவர் பாகுபலி படத்தை பற்றி பெரிய அளவில் புகழ்ந்து வருகிறார். அவர் தான் அமீர்கானை வைத்து ராஜமெளலி இயக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறாராம்.
ஏற்கனவே இயக்குநர் ராஜமெளலி பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான அமீர்கானை இயக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதை கேள்விப்பட்ட கரண் ஜோகர் அமீர் கானை வைத்து ஒரு படம் இயக்கி தருமாறு ராஜமெளலியிடம் கேட்டுக்கொண்டாராம். இதனால் பாகுபலி படத்தை அடுத்து அவர் அமீர் கான் நடிக்கும் படத்தை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment