மும்பையில் இஸ்லாமியர் என்பதால் வேலை கிடையாது என்று கூறிய நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த MBA பட்டதாரி சிசார் அலி கான். இவர் தனது படிப்பிற்கு ஏற்ற வேலையை தேடி வருகிறார். இந்நிலையில் மும்பையில் உள்ள ஒரு பிரபல வைர நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.
வைர ஏற்றுமதி செய்யும் அந்நிறுவனம், அவர் முஸ்லீம் என்பதால் வேலை கிடையாது என்று கூறிவிட்டதாம். குறிப்பிட்ட மதம் என்பதால் வேலை தர மறுத்ததால், அந்நிறுவனம் மீது போலீஸில் புகார் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிசார் அலி கான் கூறியுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானது, எங்கள் நிறுவனத்தில் அப்படி பிரிவினை ஏதும் பார்க்கப்படுவதில்லை. எங்கள் நிறுவனத்தின் HR பிரிவில் கூட இதே மதத்தினை சேர்ந்த ஒருவர் வேலை பார்க்கிறார் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது அந்த நிறுவனத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் பலர் திரண்டுள்ளனர். அந்நிறுவனம் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அது மட்டுமின்றி மஹாராஷ்டிரா அரசும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.







No comments:
Post a Comment