முனி, காஞ்சனா என காமெடி கலந்த ஹாரர் படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸின் அடுத்த படைப்பு தான்’காஞ்சனா 2’. கடந்த மாதம் வெளிவந்த இப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது.
படம் வெளிவந்த இரண்டே நாளில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்து எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் அதன் அடுத்த பாகத்தையும் இயக்க தயாராகிவிட்டார் லாரன்ஸ்.
இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு காஞ்சனா 2 படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாகி ஆந்திராவிலும் நல்ல வரவேற்பை பெற்றவருகிறதாம் . தெலுங்கு பதிப்பில் இந்த மூன்று வாரத்தில் கிட்டத்தட்ட 17.6 கோடி வசூல் செய்துள்ளதாம் காஞ்சனா 2.
எந்திரன் , ஐ பிறகு தெலுங்கில் மிக பெரிய வசூலை ஈட்டிய படம் என்றால் அது காஞ்சனா 2 தான் என்று அங்குள்ள விநியோகஸ்தார் நிசாம் தெரிவித்தார். ஏற்கனவே தமிழ் நாட்டில் எந்திரன் வசூல் ஈடாக காஞ்சனா 2 வசூல் செய்கிறது என்று கூறப்படுகிறது. இதெல்லாம் வைத்து பார்க்கும் போது பிரமாண்ட இயக்குநர்ஷங்கரை நெருங்கி விடுவார் போல ராகவ லாரன்ஸ்.







No comments:
Post a Comment