தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெரும் அளவில் மண்ணை நிரப்பி, புதிதாகப் பெரிய தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது.
இப்பகுதி தொடர்பாக ஏற்கனவே, சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே பிரச்சனை உள்ளது. இந்நிலையில் சீனா ஸ்ப்ராட்லி தீவுப்பகுதியில் செயற்கையாக தீவை உருவாக்கும் முயற்சிக்கு பல நாடுகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அந்த தீவுக்கு மேல் பறந்த அமெரிக்க உளவு விமானத்தின் மூலம், அந்த பகுதியில் சீனா கட்டுமானப் பணிகளை தொடங்கிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் இது குறித்த விவரங்கள் எதுவும் தன்னை வந்து சேரவில்லை என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் இதே பகுதியில் பிலிப்பைன்ஸ் ராணுவ விமானங்கள் பறக்க கூடாது என்று சீனக் கடற்படை எச்சரித்தது நினைவு கூரத்தக்கது.
வியட்னாமிற்குக் கிழக்கே, தென் சீனக் கடலில் அமைந்துள்ள ஸ்ப்ராட்லி தீவுக் கூட்டத்துக்கு, சீனா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணை சொந்தம் கொண்டாடி வருகின்றன.







No comments:
Post a Comment