இங்கிலாந்தில் மாட்டு சாண வாயு மூலம் இயங்கும் பேருந்து 123 கி.மீ வேகத்தில் ஓடி சாதனை படைத்துள்ளது.
சுற்றுசூழலை பாதுகாக்கும் முயற்சியில் இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர்கள் மாட்டு சாணம் மூலம் தயாரிக்கப்படும் வாயு மூலமாக இயங்கும் பேருந்தை கண்டுபிடித்தனர். இதனை இங்கிலாந்தின் பெட்ஃபோர்டின் மில்புரோக் மைதானத்தில் சோதனை செய்தனர்.
சோதனையின் போது இந்த பேருந்து, மணிக்கு 123.57 கிமீ வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது. மாடு இனங்களுள் ஒன்றான பிரைசியன் மாட்டைப் போல கருப்பு வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இது, முற்றிலுமாக இயற்கை எரிவாயு மூலமாக மட்டுமே இயங்குகிறது.
இந்த எரிவாயுவை சேமிக்க இப்பேருந்தின் மேல் 7 கொள்கலன்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது குறித்து இதன் தலைமை பொறியாளர் கூறுகையில், ’வேகத்தை விட பேருந்து போக்குவரத்தால் ஏற்படும் புகை, துர்நாற்றம் ஆகியவற்றை குறைப்பதே எங்களின் நோக்கமாக இருந்தது.’ என்று தெரிவித்துள்ளார்.







No comments:
Post a Comment