தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய்க்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்ததே.
தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு, மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள், இலவச கம்யூட்டர் பயிற்சி மையங்கள் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஜய்.
விஜய் படம் ரிலீஸானால் போஸ்டர் அடித்து ஒட்டுவது, பாலாபிஷேகம் ஊற்றுவது, கட்-அவுட் வைப்பது என்று இல்லாமால் அவரை போன்றே அவரது ரசிகர்களும் சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போன நேபாள மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை செய்து அசத்தினர் விஜய் ரசிகர்கள்.
இந்நிலையில் தற்போது விஜய் அவரது ரசிகர்கள் மீது கோபத்தில் இருக்கிறாராம். காரணம் ரசிகர் ஒருவர் நாக்கில் சூலம் ஏற்றி கொண்டு விஜய்யை காண்பிப்பது போல் ஒரு புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் அந்த ரசிகரை கண்டித்துள்ளனர். விஜய்யும் இந்த செயலால் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து விஜய் ரசிகர் ஒருவர் கூறுகையில், இது போல் தங்களை கஷ்டப்படுத்தி கொள்ளும் எந்த ஒரு செயலையும் எங்கள் தலைவா விரும்பமாட்டார் என்றார்.







No comments:
Post a Comment