Friday, 22 May 2015

மீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!


217 நாட்களுக்கு பின் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னை போயஸ் தோட்டம் இல்லத்தில் இருந்து எளியே வந்துள்ளார். ஜெயலலிதா திரும்ப வந்ததை அ.தி.மு.க.,வினர் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
பெருந்திரளாக கூடியிருந்த லட்சக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள் ஜெயலலிதாவை வரவேற்றனர். இன்று காலை ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ரோசையா, அ.தி.மு.க.,வின் புதிய சட்டப்பேரவை தலைவரான ஜெயலைதாவை புதிய அமைச்சரவையை அமைக்குமாறு கூறியிருந்தார்.
இதன் படி இன்று மதியம் புதிய அமைச்சர்களின் பட்டியலுடன் ஆளுநர் ரோசையாவை நேரில் சென்று சந்தித்தார் ஜெயலலிதா. ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்த ஜெயலலிதா அவரிடம் 15 நிமிடங்கள் பேசினார். இதன் பின் தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக சென்றார்.
இதை அடுத்து ஜெயலலிதா நாளை முதல்வராக பதவியேற்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார்.
ஜெயலலிதாவுடன், ஓ. பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, பா.வளர்மதி, பி. தங்கமணி, செந்தில் பாலாஜி ,செல்லூர் ராஜு, ப. மோகன் , என் சுப்ரமணியன்,கே. ஏ.ஜெயபால், ஆர்.காமராஜ், எம். சி. சம்பத் , கோகுல இந்திரா, டி. கே .எம். சின்னையா, எஸ். பி. சண்முகநாதன், முக்கூர் சுப்ரமணியன், வைத்திலிங்கம், வேலுமணி, சுந்தர்ராஜன், ராஜேந்திரபாலாஜி, பழனியப்பன், உதயகுமார், பூனாட்சி, அப்துல் ரஹீம், வீரமணி, விஜயபாஸ்கர், ரமணா, தோப்பு என்.டி. வெங்கடாசலம் உள்ளிட்ட 29 பேர் நாளை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இருந்த செந்தூர் பாண்டியன், ஆனந்தன் ஆகிய இருவரும் உடல் நலக் குறைவு காரணமாக இந்த புதிய பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment