'அமரகாவியம்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஆர்யாவின் தம்பி ’சத்யா’. அவர் ஏற்கனவே ’புத்தகம்’ படத்தில் நடித்திருந்தாலும், அமரகாவியம் படம் மூலமே அனைவராலும் அறியப்பட்டார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ’எட்டுத்திக்கும்’ மதயானை படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தற்போது சென்னை சிங்கப்பூர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைத்தவிர ஒரு சில இயக்குநர்களிடம் கதையும் கேட்டு வருகிறார். இவரிடம் கதை சொல்ல வேண்டும் என்றால் முதலில் அவருடைய அண்ணன்ஆர்யாவிடம் கதை சொல்ல வேண்டும். ஆர்யாவிற்கு பிடித்திருந்தால் தான் சத்யா நடிப்பாராம்.
அப்படி தான் சமீபத்தில் ஆர்யாவின் தம்பியை தன் படத்தில் நடிக்க கேட்டு போயிருக்கிறார் நான் படத்தின் இயக்குநர் ஜீவா சங்கர். முதலில் ஆர்யாவிடம் கதை சொல்ல வேண்டும் அல்லவா..? அதனால் அந்த படத்தின் கதையை ஆர்யாவிடம் சொல்லியிருக்கிறார் ஜீவா சங்கர்.
கதையை கேட்ட ஆர்யா சிறிது நேரம் மெளனம் காத்துவிட்டு ஏன் இந்தப் படத்தில் என் தம்பி நடிக்கனும் நானே நடிக்கிறேன் என்று கூறிவிட்டாராம். சோறு கிடைக்குமானு எதிர்ப்பார்த்து போன இடத்தில் பிரியாணி கொடுத்த வேண்டாம்னா சொல்லுவாங்க, அந்த இயக்குநரும் ஓகே சொல்லிவிட்டாராம்.
ஆனால் இதைக்கேள்வி பட்ட ஆர்யாவின் தம்பி சத்யா ஆர்யா மீது செம்ம கோபத்தில் இருக்கிறாராம். தன் தம்பிக்கு சொன்ன கதை ஆர்யா பிடுங்கிற அளவுக்கு அப்படி என்ன கதை என்றால் ஜீவா சங்கர் சொன்னது, அரசியல் கலந்த திகில் கதையாம்.. இப்போதுதான் திகில் கதை என்றாலே சக்கஸஸ் தானே. அதனால் தான் ஆர்யா அந்த கதையை மடக்கிக்கொண்டார்.







No comments:
Post a Comment