Friday, 22 May 2015

2 மடங்கான குடியேறிகளின் எண்ணிக்கை: குறைக்க திட்டமிடும் பிரிட்டன்!!


பிரிட்டனில் பிற நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்து வருவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி யுள்ளதாக, இருமடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனில் அண்மையில் நடத்தப்பட்ட புள்ளிவிவரத்தின் படி, புலம் பெயர்ந்து வாழ்ந்து வருவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2013 வருடம் கணக்கிடப்பட்டதை (1 லட்சத்து 9 ஆயிரம்) விட இரண்டு மடங்காகும். கடந்த மூன்று ஆண்டுகளில் 6 இலட்சத்து 41 ஆயிரம் பேர் பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளதாக தகால்கள் தெரிவிக்கின்றன.
இதில் தொழில் வாய்புகளுக்காக இடம்பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும், 2 இலட்சத்து 84 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாது கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய அதிகரிப்பு இது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவிக்கையில், பிரிட்டன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக குடியேறுவோறின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும், இதைத் தடுக்க, சட்டவிரோதமாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் பவுண்டுகள் வரை அபராதம் விதிக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சட்ட ரீதியில் குடியேற்றங்களை குறைப்பது என்பது பிரிட்டனுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கேமரூன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment