பழனியை அடுத்துள்ள பாறைப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசுவின் மகன் ஸ்ரீ ராமானுஜம் (10). இவர் தொண்டாமுத்தூரில் உள்ள பார்வையற்றோர் தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அங்கு விடுதியில் தங்கி படித்து வரும் இவருக்கு பார்வையில்லா விட்டாலும் தொலைக்காட்சி செய்திகளை கேட்பது பிடித்த விஷயமாக இருந்திருக்கிறது. இதனால் செய்தி வாசிக்க வேண்டும் என்பது அவருக்கு வெகுநாள் ஆசை.
30 நிமிட செய்தியை கேட்டுவிட்டு அதை அச்சு பிசகாமல் திருப்பி பேசிக் காட்டும் அவருடைய திறமை இப்போது அவரை செய்தி வாசிப்பாளராக்கி உள்ளது. ராமானுஜனின் திறமையை கேள்விப்பட்ட லோட்டஸ் சேனல் அவரை அணுகி தங்கள் சேனலில் செய்தி வாசிப்பாளராக்கியது.
அவரெக்கென்று ப்ரெய்லி முறையில் ஸ்கிரிப்ட் போர்ட் தயார் செய்து அதை தடவிப்பார்த்து படித்துக் கொண்டே கேமராவை பார்க்க பயிற்சி அளித்தது. அதன் பிறகு அவரை செய்தி வாசிப்பாளராக்கி இருக்கிறது. 30 நிமிட செய்தி நேரத்தில் 30 செய்திகளை அநாயசமாக வாசிக்க ஆரம்பிக்கிறார் ராமானுஜம்.
தற்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 மணிக்கு செய்தி வாசித்து வருகிறார். நல்ல பயிற்சி கிடைத்தும். தினமும் செய்தி வாசிக்க வைக்க சேனல் முடிவு செய்திருக்கிறது. ராமானுஜனின் சாதனை கின்னஸ் புத்தகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லோட்டஸ் சேனல் ஏற்கெனவே பத்மினி பிரகாஷ் என்ற திருநங்கையை செய்தி வாசிப்பாளராக்கியது குறிபிடத்தக்கது.







No comments:
Post a Comment