Friday, 22 May 2015

பக்கத்தில் நின்று பேச முடியாத அளவிற்கு வாயில் கப் அடிக்கிறதா??


வாய் துர்நாற்றம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை. இதனால், மற்றவர்களுக்கு அருகில் சென்று பேசுவதற்கே மிகவும் கூச்சமாக இருக்கும்.
இதைவிட கொடுமை காதலி/காதலனுக்கு அருகில் செல்ல மிகவும் பயமாக இருக்கும். சிறிது முகம் சுளித்து விட்டாலும், பெரிய பிரச்சனைகளில் முடிய வாய்ப்புகள் உண்டு.
இதனை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.
நேரம் தவறாமல் உணவு உண்ண வேண்டும். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதும் உங்கள் வாயில் துர்நாற்றம் ஏற்பட காரணமாக அமையும்.
உங்கள் வாய் உலர்வாக இருப்பது கூடாது. அடிக்கடி தண்ணீர் அருந்திக்கொண்டே இருப்பது அவசியமாகும்.
காலை பல் துலக்கும் போது, உங்கள் நாக்கினை சுத்தம் செய்வது முக்கியமாகும். நாக்கில் இருக்கும் வெள்ளை படலமே வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.
Mint சுவை கொண்ட சுவிங்கங்கள் மெல்லுவதும் நல்ல பலனை தரும்.
வாயில் ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை மெல்லுவதும் வாய் துர்நாற்றததினை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கிராம்பு வாய் துர்நாற்றத்தினை போக்குவதில் மட்டுமின்றி பல் மற்றும் ஈறுகளை பத்திரமாக பாதுகாக்கவும் பயன்படுகிறது.
கொத்தமல்லி மற்றும் கீரை ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. அதில் காணப்படும் குளோரோபில் வாய்துர்நாற்றத்தினை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காஃபி மற்றும் டீ அருந்தியதும் தண்ணீர் குடிப்பதும் நல்ல பழக்கம் ஆகும். அதுவும் உங்கள் வாய் துர்நாற்றத்தினை போக்கும்.

No comments:

Post a Comment