Friday 12 June 2015

சிகரெட் பிடிப்பவர்கள் நிச்சயம் உட்கொள்ள வேண்டிய உணவுகள்..!!

நுரையீரல், நாம் உயிர் வாழ கண்டிப்பாக இது ஆரோக்யமாக இருக்க வேண்டும். இதுதான் நம் உடலின் சுவாசிக்கும் பணியை செவ்வனே செய்கின்றது. இதனை பாதுக்காக தவறினால் சுவாசப் பிரச்சனை நிச்சயம்.
புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு போன்றவை சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.
அதனால், நுரையீரலை சுத்தப்படுத்தும் பழங்கள், சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் உணவுகள் மற்றும் சுவாசத்தை சீராக்கும் உணவுகள் ஆகியவற்றை புகைப்பிடிப்போர் கட்டாயம் உண்ண வேண்டும்.
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் நுறையீரல் பாதுகாப்பு குறித்து காணலாம்!!
மாதுளை:
மாதுளைகள் உடற்கூறுக்குறைகளை நீக்கவல்லவை. மேலும் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கக் கூடியவை. மூச்சுப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு இது. இதன் சாறு பல்வேறு உடல் நலம் தொடர்பான பயன்பாடுகளுக்கு உதவுகிறது.
வெங்காயம்:
வெங்காயம் கொஞ்சம் கெட்ட வாடை அடிக்கும் என்பது உண்மைதான். ஆனால், அந்த கெட்ட வாடைதான் நுரையீரலை சீராக்குவதில் மிகச்சிறந்த ஒன்று. புகைப்பிடிப்போர் கண்டிப்பாக வெங்காயத்தை உண்டு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆப்பிள்:
ஆப்பிள்களில் ’ஃப்ளேவோனாய்டுகள்’ ,வைட்டமின் ஈ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. இவையனைத்தும் சுவாச நலனில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியவை.
கேரட்:
கேரட்டுகள் சுவாசக் கோளாறுகளை சரிசெய்வதில் ஒரு ஆச்சரியமான முறையில் உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால், நுரையீரல் நலனைப் பேணுவதில் மிகவும் உதவுகின்றன.
நட்ஸ்:
வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகள் உடற்கூறுக் கேட்டைத் தடுப்பதுடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் அடங்கியுள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு உரத்தை அளிக்கிறது. இவை நுரையீரலை சுத்தம் செய்யும் சத்தான
உணவாகும்.
பீன்ஸ்:
பீன்ஸ் கேன்சரைத் தடுக்கும் குணாதிசயங்களை கொண்டுள்ளதுடன், மக்னீசியத்தை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ளன. இது நுரையீரல் ஆரோக்கியமாகச் செயல்பட முக்கிய செயலாற்றுகின்றன.

Related posts

No comments:

Post a Comment