Tuesday 9 June 2015

4,000 தொழிலாளர்களை பலி கொடுத்து கத்தாரில் நடக்கும் FIFA உலகக் கோப்பை!!?

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து மைதானத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அது ஆரம்பிக்கப்படுவதற்குள் 4,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கத்தாரில் 2022ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இதற்கான மைதானம் அமைக்கும் பணி கத்தாரின் தலைநகர் தோஹா அருகே மிக பிரம்மாண்டமான மைதானத்தை அமைத்து வருகிறது. இதற்கான பல லட்சம் கோடி ரூபாய்களை செலவழித்து வருகிறது கத்தார். அதோடு தனி நகரத்தையே ஏற்படுத்தி வருகிறது.
இந்த கட்டுமானப் பணிகளில் இந்தியா, நேபாளம், ஆஸ்திரேலியா, வங்கதேசம் போன்ற பகுதியில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப் படுகிறார்கள். இந்நிலையில் இந்த கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 1,200 பேர் இதுவரை இறந்துள்ளதாக ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது. இறப்பு எண்ணிக்கை இத்துடன் முடிந்துவிடப் போய்விடுவதில்லை. கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4,000த்தை தாண்டும் என்றும் அந்த செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
கட்டுமானப்பணியின் போது ஏற்படும் விபத்து, தாங்க முடியாத வெப்பம், வாழும் சூழ்நிலை ஆகியவை தொழிலாளர்களின் உயிரை பறிப்பதாகவும் கூறியுள்ளது கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கட்டுமானப் பணிக்ககாகத்தான் உலகிலேயே அதிக தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.
உலகக் கோப்பை போட்டியை தங்கள் நாட்டில் நடத்த, கத்தார் நாடு லஞ்சம் அளித்து வாய்ப்பை பெற்றுள்ளதாக ஏற்கனவே FIFA-ல் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து சர்வதேச நாடுகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஒரு டாக்குமெண்டரி படமும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ கீழே..

No comments:

Post a Comment