Saturday 13 June 2015

இன்றைய தினம்..!!(ஜூன் 14)

ஜூன் 14
உலக ரத்ததான தினம்..!!
சர்வதேச ரத்ததானம் செய்வோர் தினம் ரத்த வகைகளை கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற கார்ல் லான்ஸ்டீனரை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த தினம் உலக ரத்த தானம் செய்வோர் தினமாக, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14ம் நாள் கொண்டாடப்படுகிறது. மக்களிடையே ரத்ததானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்ததானம் அளிப்பவர்களை பெருமைப்படுத்தும் நோக்கிலும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
யார் ரத்தம் வழங்கலாம்?ரத்தம் வழங்குவதால், தெரியாத ஒரு நபரை காப்பாற்றுவதோடு, இரண்டே நாட்களில் இழந்த ரத்தத்தையும் பெற்று விடலாம். 3 மாதத்துக்கு ஒருமுறை ரத்தம் வழங்கலாம். ரத்ததானம் செய்வோர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். அவரது எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், சமச்சீரான உடல்வெப்பம் உடையவராகவும் இருத்தல் நல்லது. சர்வதேச அளவில் 57 நாடுகள் “நூறு சதவீதம் இலவச ரத்ததானம்’ பெற்றுள்ளனர். 2002ல், 39 நாடுகள் மட்டுமே “நூறு சதவீதம் இலவச ரத்ததானம்’ பெற்றிருந்தன.
இந்தியாவில் ஆண்டுக்கு 4 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் 40 லட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 38 ஆயிரம் ரத்ததானம் செய்வோர் தேவைப்படுகின்றனர். உலகமெங்கும் 8 கோடியே 10 லட்சம் யூனிட் ரத்தம் ஆண்டுதோறும் சேகரிக்கப்படுகிறது. 2006 நிலவரப்படி, 150 நாடுகளில் மொத்தம் 6 கோடியே 90 லட்சம் யூனிட்டுகள் சேகரிக்கப்பட்டது. இதில் 3 கோடிக்கும் மிகக்குறைவான ரத்தம் மட்டுமே வளரும் மற்றும் ஏழை நாடுகளில் இருந்து கிடைத்துள்ளது. உலகின் 80 சதவீதம் மக்கள் தொகையை கொண்ட இந்நாடுகளுக்கு இதுபோதுமானது அல்ல. விபத்து, அறுவைசிகிச்சை போன்ற நேரத்தில் உடனடியாக ரத்தம் கிடைக்காததால் உயிரிழப்பு என்பது இந்நாடுகளில் தவிர்க்க முடியாததாகிறது. ரத்ததானம் செய்வதன் மூலம் உயிரிழப்புகளை தடுப்போம்.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1872 – கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.
1900 – ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1941 – அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
1962 – ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

Related posts

No comments:

Post a Comment