Saturday 6 June 2015

மேகி நூடுல்ஸ் பிரச்சினைக்கு அரசு தான் காரணம்.. நடிகர்களை ஏன் தண்டிக்க வேண்டும்


மேகி நூடுல்ஸ் பிரச்னை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதில் நடித்த நடிகர், நடிகையர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகிறது. இதற்கு பல நட்சத்திரங்கள் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் ஆர்யா கூறியிருப்பதாவது, இறக்குமதி செய்யப்படும் எல்லா உணவு பொருட்களையும் இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் பரிசோதனை செய்து, உரிய சான்று அளித்த பின்னரே அவை விற்பனை செய்யப்படுகின்றன. அப்படி தரமான உணவு பொருட்கள் என்று மத்திய அரசு சொன்ன பிறகே நடிகர்களாகிய நாங்களும் அது சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் நடிக்கிறோம்.
எனவே உணவு பொருட்களின் தரம் பற்றிய பிரச்னையில் நடிகர்களாகிய எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. அரசு தான் இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமின்றி நாங்கள் நடித்த விளம்பரங்களுக்கு பெறப்படும் சம்பளத் தொகையில் வருமான வரியும் கட்டி வருகிறோம் என்று கூறியுள்ளார்.
அதேபோல் நடிகை குஷ்பு மேகி நூடுல்ஸ் விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டரில், ஒரு பொருளை அது தரமான பொருள் என்று அரசு அங்கீகாரம் செய்த பிறகே அது விற்பனைக்கு வருகிறது.
இந்த நிலையில் அதன் விளம்பரங்களில் நடித்தவர்கள் மீது எப்படி பழி போடுவீர்கள்?. கடையில் ஒரு பொருள் விற்பதற்கு முன்பு அதனை சோதனை செய்ய மாட்டார்களா? ஒரு பொருள் வாங்கி அதனை சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட பிறகுதான் பரிசோதனை செய்வார்களா? எதையும் நாம் தலைகீழாகத்தான் செய்வோமா? என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
காமெடி நடிகர் சந்தானம் இது குறித்து கூறியிருப்பதாவது, விளம்பரங்களில் நடிப்பதால் நடிகர்கள் தண்டிப்பது சரியான அணுகுமுறை அல்ல. சந்தையில் விற்பதற்கு ஏதுவான பொருள் என அரசங்கம் சான்றளித்த பிறகே அதை விளம்பரப்படுத்த விளம்பர நிறுவனங்கள் நடிகர்களை அணுகுகின்றனர்.
பின்னர் எப்படி இத்தகைய தவறுகளுக்கு நடிகர்கள் காரணமாக முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களை தவிர இன்னும் சில நடிகர், நடிகைகள் இந்த விவகாரம் தொடர்பாக கேல்விகளை எழுப்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment