Friday 12 June 2015

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு 23வது இடம்!!

ஃபோர்ப்ஸின் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பெற்றுள்ளார்.
2014 ஜூன் முதல் 2015 ஜூன் வரையிலான ஒருவருட காலகட்டத்தில் சர்வதேச விளையாட்டு வீரர்களின் வருமான பட்டியலை அமெரிக்காவின் புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இதில், பிரபல குத்துச் சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் ரூ.1900 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தத் தொகை இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த விளையாட்டு வீரரின் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
மேவெதருக்கு அடுத்து ரூ.1022 கோடியுடன் குத்துச்சண்டை வீரர் பாக்கியாவ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ரூ.198 கோடியுடன் 23-ஆவது இடத்தில் உள்ளார்.
ஊதியம் மற்றும் வெற்றிகளின் மூலம் ரூ.25 கோடியும், விளம்பரங்களின் மூலம் ரூ.173 கோடியும் தோனிக்கு ஒருவருடத்தில் வருமானமாக கிடைத்துள்ளது.
அவர் தவிர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, டென்னிஸ் வீரர்களான ரோஜர் பெடரர், நவோக் ஜோகோவிச், ரஃபேல் நடால், வீராங்கனைகளான ரஷியாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கோல்ஃப் விளையாட்டின் டைகர் உட்ஸ், ஜெர்மனியின் “ஃபார்முலா ஒன்’ கார்பந்தய வீரர் செபாஸ்டின் வெட்டல், தடகள வீரர் ஜமைக்காவின் உசேன் போல்ட் ஆகியோரும் அதிக சம்பளம் பெறும் முதல் நூறு வீரர், வீரங்கனைகள் ஆவர்.
தோனியை தவிர இந்திய விளையாட்டு வீரர்கள் யாரும் முதல் நூறு இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment