Sunday 14 June 2015

இன்றைய தினம்!!(ஜூன் 15)

ஜூன் 15
உலக காற்று தினம்..!!
காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.
ஆண்டுதோறும் ஜூன் 15 காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.
உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்றுதான். காற்று எங்கும் நிறைந்த பொருள். இதனை கண்ணினால் பார்க்க முடியாவிடினும், இதன் செயலால் இதனை உணர்ந்து கொள்கிறோம். ஆறு அறிவுடைய மனிதன் முதல் ஓரறிவுடைய தாவரம் வரை உள்ள ஒவ்வோர் உயிருக்கும் காற்று இன்றியமையாததாகும். இக்காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது.
காற்றோட்டமில்லாத இடத்திலும், மக்கள் நிறைந்த இடத்திலும் நச்சுக்காற்றுமிகுந்திருக்கும் ஆதலால் அங்கு அதிக நேரம் தங்குவதற்கு சிரமமாக இருக்கும்.ஒருவேளை தங்க நேரிட்டால் தூய காற்றை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறும்.
உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும். ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது.
உயிரினங்கள் தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடுமிகவும் முக்கியமாகும். தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்-டை-ஆக்ஸைடு என்றகரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது.உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன.
பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக இருந்த காடுகளை அழித்ததன்விளைவுதான் காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது. மேலும் எண்ணற்ற தொழிற் சாலைகளின் புகை, வாகன புகை என பல வகைகளில் காற்றுமாசடைந்து வருவதால் இயற்கை சீர்கெட்டு, மனித இனமும் ஆரோக்கியமின்றி அலைந்து கொண்டிருக்கிறது.
நெருங்கிய வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள்,சுண்ணாம்புக் காளவாய்கள், இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும் காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது.
இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1667 – சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்ற பிரெஞ்ச் மருத்துவர் முதன் முதலில் மனித இரத்த மாற்றீட்டை செயற்படுத்தினார்.
1752 – மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார்.
1911 – ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
சிறப்பு நாள்:
டென்மார்க் கொடிநாள்.

No comments:

Post a Comment