Saturday 6 June 2015

வெஸ்ட் இண்டீஸை திணறடித்த ஆஸ்திரேலியா..!!


ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருகின்றது. அந்த அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9விக்கட்டுக்களால் அபார வெற்றியை பெற்றது.
இந்தப் போட்டி மேற்கிந்திய தீவிலுள்ள டொமினிக்கா என்ற மைதானத்தில் நடைபெற்றது, ஆட்டத்தில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் ஆடியது அதன் படி அந்த ஆஸ்திரேலியா அணியின் வேகப் பந்துவீச்சுக்களை எதிர்கொள்ள முடியாமல் 148 ரன்களில் சகலவிக்கட்டுக்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் சார்பில் ஜான்சன் 3விக்கட்டுக்களையும், ஹாசில்வுட் 3விக்கட்டுக்களையும், ஸ்டார் 2விக்கட்டுக்களையும், சுமித், லியோன் ஆகியோர் தலா 1விக்கட்டை கைப்பற்றினர் இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸ்திரேலியா அணி சகலவிக்கட்டுக்களையும் இழந்து 318 ரன்களை எடுத்தது.
அந்த அணிக்காக ஆதிகக் கூடிய ரன்னாக ஆடம் வோக்ஸ் மிகச் சிறப்பாக ஆடி சதம் அடித்தார் இவர் ஆட்டமிழக்காமல் 130 ரன்களை எடுத்தார் அவரைத் தொடர்ந்து ஹாசில்வுட் 39 ரன்களை எடுத்து கொடுத்தார். இதனால் மேற்கிந்திய அணியை விட ஆஸ்திரேலியா அணி 170 ரன்களை கூடுதலாக எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் தேவேந்திர பிசோ 6விக்கட்டுக்களையும், டெய்லர், கேபிரியல், ஹோல்டர், சாமுவேல்ஸ் ஆகியோர் தலா 1விக்கட்டை கைப்பற்றினர்.
தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி மீண்டும் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 216 ரன்களில் சகலவிக்கட்டுக்களையும் இழந்தது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக ஆடிய சாமுவேல்ஸ் 74 ரன்களையும் , ட்வ்ரிச் 70 ரன்களை எடுத்து இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றிய அந்த அணி ஆஸ்திரேலியா அணியை விட 46 ரன்களை சற்று கூடுதலாக எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சு சார்பில் ஸ்டார் 4விக்கட்டுக்களையும், ஜான்சன், ஹாசில்வுட், லியோன் ஆகியோர் தலா 2விக்கட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா அணி 1விக்கட்டை இழந்து மிக இலகுவான வெற்றி இலக்கை அடைந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 9விக்கட்டுக்களால் மாபெரும் வெற்றியை பெற்றது.
அந்த அணிக்காக டேவிட் வோர்னர் 28 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார் ஏனைய வீரர்களான ஷேன் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 13 ரன்களையும் அடுத்து ஆடவந்த சுமித் ஆட்டமிழக்காமல் 5 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர் மேற்கிந்திய தீவுகள் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் சார்பில் டெய்லர் 1விக்கட்டை மட்டும் கைப்பற்றினர் இந்த டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக ஆடி சதம் அடித்த ஆடம் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார் இந்த வெற்றியை தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது

No comments:

Post a Comment