Friday 5 June 2015

7 விருதுகளுக்கு ’ஐ ஆம் வெயிட்டிங்'..!


இந்திய திரையுலகில் தேசிய விருதுகளுக்கு அடுத்து உயரிய விருதாக கருதப்படுவது ஃபிலிம்ஃபேர் விருதுகள்தான்.
திரையுலகில் சிறந்தவர்களை கவுரவிக்கும் விதமாக இந்த விழாவை ஐடியா நிறுவனம் நடத்திவருகிறது. ஆண்டுதோறும் பிலிம்பேர் விருதுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டும் பிலிம்பேர் விருதுகள் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
முன்னதாக இந்தாண்டு விருதுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இருந்து படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன இதில் கத்தி படம் மட்டும் 7 விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமான தமிழ் படங்கள் மற்றும் தமிழ் நடிகர்கள் இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ள நிலையில், விஜய் நடித்த கத்தி திரைப்படம் 7 விருதுகளுக்காக தேர்வு செய்யப் பட்டுள்ளது எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை,சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த பாடகர் ஆகிய 7 பிரிவுகளில் கத்தி திரைப்படம் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.
கடந்த வருடம் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் வெளியான கத்தி திரைப்படம் சுமார் 70 கோடி செலவில் எடுக்கப்பட்டு 130 வசூலைக் குவித்தது. 2014 ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ஒருசில திரைப்படங்களில் கத்தியும் ஒன்று. இப்படம் எந்தப் பிரிவில் விருதை வெல்லப் போகிறது என விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஐ ஆம் வெயிட்டிங்....

No comments:

Post a Comment