Thursday 11 June 2015

இன்றைய தினம்!!(ஜூன் 12)


ஜூன் 12
சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்!!
ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஐநா சபையின் ஒரு அமைப்பான ILO(International Labors Organization) மூலம் 2002ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோர கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் ௧௪ வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பதிப்புகளை முன்று வகையாக பிரித்துள்ளது. உடல் ரீதியான பாதிப்பு, உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு மற்றும் உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு.
கொடிய வறுமை, உட்டசத்துக் குறைவு, கல்வியறிவு பெற முடியாத நிலை, உடல் நலனை பாதிக்கக் கூடிய ஆபத்தான சூழல், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை போன்றவை சிறார்களின் உடல் நலனைப் பெரிதும் பாதிப்பதால் ஆஸ்துமா, காசநோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர்.
மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சிறார்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றன.
கல்வியறிவு பெறமுடியாமல் வறுமையை விரட்ட எண்ணி சிறுவயது முதல் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் இவர்களால் சமுதாயத்தில் கடைசி வரை ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் சமுகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1898 – பிலிப்பீன்ஸ் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1964 – தென்னாபிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.
2006 – கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment