Thursday 11 June 2015

வசூல் குவிக்காத மாஸ்.. சூர்யாவுக்கு செக் வைத்த சிறுவர்கள்..?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ’மாசு என்கிற மாசிலாமணி’. பல கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சங்களை பெற்றது. இதனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் குவிக்கவில்லை.
ஆனால் யாருமே எதிர்பாராதவகையில் காக்கை முட்டை படம் மிகப்பெரிய வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வெளிவந்த இப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது என்று சொல்கின்றனர். அதோடு சாட்டிலைட் உரிமையை விற்றவகையிலும் 1 கோடி கிடைத்திருக்கிறது.
திரைப்படவிழாக்களில் படத்தை திரையிட்ட வகையிலும் சில கோடிகளை ஏற்கனவே சம்பாதித்துக் கொடுத்துவிட்டது காக்கா முட்டை. இவை தவிர பிற மொழி உரிமையை விற்கும்போதும் சில கோடிகள் கிடைக்கும். இவற்றை எல்லாம் பார்க்கும்போது காக்கா முட்டை சுமார் 15 கோடியை லாபமாக கொடுக்கும் என்று கணிக்கிறார்கள் சினிமா வியாபாரிகள்.
இவ்வளவு லாபத்தைக் கொடுத்திருக்கும் காக்கா முட்டை படத்தின் தயாரிப்பு செலவு எவ்வளவு தெரியுமா? வெறும் 80 லட்சம்தான். அதாவது இப்படத்தை எடுக்க தனுஷிடமிருந்து வெற்றிமாறன் வாங்கியது ஒன்றரை கோடி. மணிகண்டனிடம் இயக்குநர் வெற்றிமாறன் கொடுத்த தொகை 80 லட்சம்தான். இந்த சிறு தொகையில்தான் 61 நாள் படப்பிடிப்பு நடத்தி அருமையான படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.
அதோடு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் முகம் தெரியாத இரண்டு சிறுவர்களை நடிக்க வைத்து லாபத்தை அள்ளி தயாரிப்பாளுருக்கு கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.

No comments:

Post a Comment