Monday 30 March 2015

அமிதாப் பச்சன், பில்கேட்ஸுக்கு பத்ப விபூஷன் விருது!!


பொதுசேவை, அறிவியல், மருத்துவம், தொழில், கலை , இலக்கியம், என துறை வாரியாக செய்த சாதனைகளை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த வருடம், அத்வானி, அமிதாப் பச்சன், பிரகாஷ் சிங் பாதல், பேராசிரியர் ராமசாமி சீனிவாசன் உள்ளிட்ட 9 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், தமிழக முன்னாள் தேர்தல் கமிஷ்னர் கோபால்சாமி, கர்நாடக இசை கலைஞர் சுதா ரகுநாதன், பில்கேட்ஸ் உள்ளிட்ட 20 பேருக்கு பத்மபூஷன் விருதும், அசோக் பகவத், சஞ்சய் லீலா பன்சாலி, ராகுல் ஜெயின், தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராமன் உள்ளிட்ட 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இவ்விருதை வழங்கி கவுரவித்தார். மொத்தம் 104 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவில் பிரதமர் மோடி, துனை ஜனாதிபதி அன்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment