Wednesday, 11 February 2015

டி.வி சீரியலாக மிரட்ட வரும் X-Men!!


எவ்வளவு காமிக் கதைகள் வந்தாலும் கூட, அதிகமான ரசிகர்களைக் கொண்ட கதை X-Men தான்.
X-Men காமிக்குகள் இன்றளவும் விற்றுக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இப்படத்தினை 8 பாகங்களாக எடுத்து விட்டார்கள். இதில் விரைவில் வெளியாக உள்ள ‘X-Men:Apocalypse’ படமும் அடங்கும்.
தற்போது இதனை தொலைக்காட்சி சீரியலாக வெளியிடப் போவதை ஃபாக்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
டுவெண்டியத் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் இதன் பட உரிமைகளை வைத்திருந்தாலும், இந்த கதைகளும், கேரக்டர்களும் மார்வல் நிறுவனத்திற்கு தான் சொந்தம். ஆனால் மார்வல் நிறுவனம் தொடர்ச்சியாக பல சீரியல்களில் பிசியாக உள்ளது.
‘Agents of Shield’ மற்றும் ‘Agent Carter’ என்று ஏற்கனவே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. மேலும், ‘Dare Devil’, ‘Iron Fist’ உள்ளிட்ட பல சீரியல்கள் இவ்வருடம் அறிமுகமாக உள்ளது. சூப்பர் ஹீரோக்களை படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியலாக பார்ப்பது என்பதும் மிக சுவாரஸ்யமான ஒன்றுதான்.

No comments:

Post a Comment