Wednesday, 11 February 2015

டுவிட்டர் Status-ன் விளைவு,,, நீங்களே பாருங்கள்…!


புதிய தொழில்வாய்ப்பொன்றை பெற்ற இங்கிலாந்து பெண் ஒருவர் அங்கு பணியாற்ற ஆரம்பிப்பதற்கு முன்னரே டுவிட்டரில் வெளியிட்ட கருத்தொன்றினால் பணி நீக்கப்பட்டுள்ளார்.
"செல்லா" எனும் இந்த பெண்ணின் அனுபவம் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையக்கூடியது. இவர் இங்கிலாந்தின் மேன்ஸ்பீல்ட் நகரிலுள்ள பீட்ஸா உணவுவிடுதியொன்றில் தொழில்வாய்ப்பை பெற்றிருந்தார்.
புதிய தொழிலொன்றை பெறும்போது மகிழ்ச்சி தெரிவிப்பதே வழக்கம். ஆனால், செல்லா தனது புதிய தொழில்வாய்ப்பு குறித்து டுவிட்டரில் அதிருப்தியான வகையில் தகவல் வெளியிட்டிருந்தார்.
"நான் நாளை இந்த ................ வேலையை ஆரம்பிக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார். (வெளியிட முடியாத வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன)
செல்லாவின் இந்த டுவிட்டர் தகவலை மேற்படி பீட்ஸா நிலையத்தின் உரிமையாளரின் கவனத்துக்கும் சென்றது. அதனால், செல்லாவை பணி நீக்கம் செய்த அறிவிப்பையும் டுவிட்டரிலேயே அந்நிலையத்தின் உரிமையாளர் ரொபர்ட் வப்பிள் வெளியிட்டார்.
"இல்லை. நீங்கள் இன்று அந்த வேலையை ஆரம்பிக்கவில்லை. உங்களை இப்போது நான் பணி நீக்கம் செய்கிறேன்.
உங்கள் நோ ஜாப், நோ மணி வாழ்க்கைக்கு நல்வாழ்த்துக்கள்" என அவர் தெரிவித்திருந்தார்.
டுவிட்டர் தகவல் காரணமாக தான் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக செல்லா புலம்புகிறார். ஆனால், செல்லா பணி நீக்கம் செய்யப்படுவதற்கு தகுதியானவர் என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment