பிரபல ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்த உள்ள ’Internet.org’ என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவில் செல்போன்களுக்கு இலவச இன்டெர்நெட் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக உலகம் முழுவதிலும் 500 கோடி வாடிக்கையாளர்களை தங்கள் வசம் இழுக்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்கனவே இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், இந்தியாவில் கால் பதிக்க உள்ளது.
தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ள ஃபேஸ்புக், இந்தியாவில் உள்ள அனைத்து செல்போன் வாடிக்கையாளர்களையும் தங்கள் வசம் இழுக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் முதலில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை, குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களையும், குறிப்பிட்ட 33 இணைய தளங்களையும் இலவசமாக அளிக்க உள்ளது.
மேலும், இது இன்னும் மூன்று மாத காலத்திற்குள் செயல்படுத்தப் படும் என்று ரிலையன்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில், ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் போன்ற நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஃபேஸ்புக் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment