Wednesday, 11 February 2015

பெண் எருமைக்கு இரையான ஆண் சிங்கம்..!


சிங்கம் என்றால் வீரத்துக்கும் எருமை என்றால் ஒருவரை தரைகுறைவாக திட்டுவதற்கும் நாம் பயன்படுத்துவது வழக்கம். எனினும் சிங்கத்தையே அதுவும் ஆண்சிங்கத்தையே பெண் எருமை ஒன்று சரமாரியாக தாக்கிய சம்பவமொன்று சாம்பியாவில் உள்ள தேசிய பூங்காவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தை அப்பூங்காவுக்குச் சுற்றுலா சென்ற மெட் ஆம்ஸ்ட்ரோங் என்ற புகைப்பட கலைஞர் மிக அழகாக புகைப்படங்களை எடுத்துள்ளார். சிங்கங்கள் எருமைகளை இலகுவாக வேட்டையாடுவது உண்டு.
ஆனால் வழமைக்கு மாறாக ஆண் சிங்கம் ஒன்று பெண் எருமை மாட்டை வேட்டையாட முற்பட்ட போது எருமை சிங்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த சிங்கம் இரத்த கரைகளுடன் நிலத்தில் வீழ்ந்து இரு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளது.
அக்காட்சிகளை நீங்களும் பாருங்கள்...

No comments:

Post a Comment