சமீபத்தில் மலையாள பிரபல இதழ் ஒன்றிற்கு என்னை அறிந்தால் படம் குறித்து பேட்டயளித்த கெளதம் மேனன் விஜய் நடிக்கும் ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ படத்தை விரைவில் படமாக்க இருப்பதாக தெரிவித்தார் என்பது எல்லோரும் அறிந்த செய்திதான்.
இந்தப்படத்தை சில வருடங்களுக்கு முன்பே கெளதம் மேனன் இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அந்த படத்தை தொடங்குவதாக அவர் தெரிவித்தார். ஆனால் யார் ஹீரோ என்று அப்போது அவர் சொல்லவில்லை. ரசிகர்கள் விஜய்தான் நடிப்பார் என்று கூறிவந்தனர்.
இந்நிலையில் தான் தற்போது அந்த கதையில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளாராம் கெளதம் மேனன். தற்போது சிம்புவை வைத்து ஏற்கெனவே தொடங்கிய படத்தை இயக்கும் பணியில் பிஸியாக இருக்கும் கெளதம் மேனன் இப்படத்தின் படப்பிடிப்பை 2 மாதத்திற்குள் முடித்துவிட்டு விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் விக்ரமை சந்தித்து தன்னிடம் இருக்கும் கதையை அவரிடம் கௌதம் சொன்னதாகவும், அது அவருக்கு பிடித்துவிட்டதால், அதனை திரைக்கதையாக்கும் பணியில் கௌதமின் டீம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
விஜய்யை வைத்து கௌதம் இயக்குவதாக இருந்த ‘யோகன் : அத்தியாயம் ஒன்று’ படத்தின் கதையைத்தான் கொஞ்சம் திருத்தி தற்போது விக்ரமிற்கு கூறியிருப்பதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
சூர்யாவுக்கு சொன்ன துப்பறியும் ஆனந்தன் கதையை தூசி தட்டி என்னை அறிந்தால் என்று அஜித்துக்கு சொன்னதுபோல் இப்போது விஜய்க்கு சொன்ன கதையை விக்ரமுக்கு சொல்லி இருக்கிறார் கௌதம் மேனன். ஆனால் இதுகுறித்து கௌதம் மேனன் இன்னும் எந்தத் தகவலையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

No comments:
Post a Comment