கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ’உத்தம வில்லன்’.
கமலின் நண்பரான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தில், ‘உத்தமன்’ என்ற 8-ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திர கதாபாத்திரத்திலும் நாடித்துள்ளார் கமல்ஹாசன். மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் குருவான சினிமா இயக்குநராக கே. பாலசந்தர் நடிக்கிறார்.
மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குநர் கே.விஸ்வநாத்தும் நடிக்கிறார்கள். 8-ம் நூற்றாண்டில் நடக்கும் ‘உத்தம வில்லனில்’ நடக்கும் கதையில் மன நோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21-ம் நூற்றாண்டு மனோரஞ்சனின் ரகசியக் காதலியாக ஆன்ட்ரியாவும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் இசைவெளியீட்டை மார்ச் 1-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். அதேபோல் படத்தை ஏப்ரல் 2-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பாளர் லிங்குசாமி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். உலகம் முழுவதும் இப்படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment