‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தை போன்று சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் வந்த நடிகர் விவேக் தற்போது மொட்டை அடித்து ’சிவாஜி’ ரஜினி ஸ்டைலுக்கு மாறியுள்ளார். இது கார்த்திக் உடன் நடிக்கும் புதிய படத்திற்காக என்று கூறப்படுகிறது. அலெக்ஸ்பாண்டியன் படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியும், இயக்குநர் சுராஜும் ஒரு புதிய படத்தில் இணைக்கின்றனர்.
இப்படத்திற்காக தான் ’சிவாஜி த பாஸ்’ கெட்டப்புக்கு மாறியுள்ளார் விவேக். தான் மொட்டை அடித்துள்ள புது கெட்டப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் விவேக். அவருடன், அவருடைய உதவியாளரான செல் முருகனும் மொட்டை அடித்து போஸ் கொடுத்துள்ளார்.
மேலும், கார்த்தி-சுராஜ் இணையும் புதிய படத்திற்காக இந்த கெட்டப் என்றும் குறிப்பிட்டுள்ளார். கார்த்தி-சுராஜ் கூட்டணியில் ஏற்கெனவே வெளிவந்த அலெக்ஸ்பாண்டியன் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால் இழந்த வெற்றியை மீண்டும் திரும்ப பெறும் முயற்சியில் இருக்கிறார்களாம் இருவரும்.

No comments:
Post a Comment