Wednesday, 11 February 2015

ஊனம் என்பது ஒரு குறையில்லை.. மன உறுதி என்பது இவரிடம் உள்ளது..!


சுறாவின் தாக்குதலினால் கையொன்றை இழந்த பின்னரும் நீர்ச்சறுக்கல் வீராங்கனையாக திகழும் பெத்தானி ஹமில்டன் (Bethany Hamilton) கர்ப்பமடைந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பெத்தானி ஹமில்டன் மெட்ரோ நியூஸ் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.
25 வயதான பெத்தானி, 2013ஆம் ஆண்டில் தனது 13 வயதில் ஹவாய் கடற்கரையில் நீர்ச்சறுக்கில் ஈடுபட்டிருக்கும் போது அவரை சுறாவொன்று தாக்கியது. அவரின் உடலில் இருந்து 60 சதவீதமான இரத்தம் வெளியேறியது. இத்தாக்குதலினால் பெத்தானி தனது இடது கையை முற்றாக இழந்தார்.
ஆனாலும் தொடர்ந்தும் நீர்ச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டு ஏராளமான வெற்றிகளைப் பெற்று உலகப் புகழ்பெற்ற பெண் ஆனவர் பெத்தானி ஹமில்டன். பெத்தானி ஹமில்டனுக்கும் அவரது காதலரான அடம் டேர்க்ஸ் என்பவருக்கும் 2013 ஏப்ரலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.
2013 ஆகஸ்ட் மாதம் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். ந்நிலையில் தற்போது பெத்தானி கர்ப்பமடைந்துள்ளார். தமது முதலாவது குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக பெத்தானியும் அவரின் கணவர் அடம் டேர்க்ஸும் கடந்த திங்களன்று அறிவித்துள்ளனர். "நான் 22 வார கர்ப்பிணியாக உள்ளேன். இதுபோல் சுமார் இன்னொரு மடங்கு காலம் நான் காத்திருக்க வேண்டும்.
நாம் பெற்றோராகப் போகிறோம் என்பதை அறிந்தபின் கடந்த நான்கு மாதங்களும் மிகக் குதூகலமாக இருந்தேன்" என பெத்தானி தெரிவித்துள்ளார். ஒரு கையுடன் குழந்தையை வளர்ப்பது கடினமாக இருக்குமே என்ற கேள்வி பலரிடம் எழும். ஆனால், இதற்கும் தன்னால் ஒரு வழி காண முடியும் என ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளையே சமாளித்து புகழ்பெற்ற பெத்தானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"ஒரு கையால் குழந்தைக்கு டயப்பர் மாற்றுவது போன்வற்றை செய்வது எனக்கு சவாலாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்க்கையில் நான் பல்வேறு விசயங்களிலும் நிலைமைக்கேற்ப சமாளித்து வந்துள்ளேன். குழந்தையை பராமரிப்பதற்கும் நான் எனது சொந்த வழிமுறையொன்றை காண்பேன்" என்கிறார் பெத்தானி ஹமில்டன். 2012ஆம் ஆண்டிற்கான வசந்த கால நீர்ச்சறுக்கல் விளையாட்டின் போது பெத்தானியும் டேர்க்ஸும் ஹவாய் கடற்கரையில் சந்திந்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்தின் பின்னர் டேர்க்ஸ் அவரது காதலை ஹமில்டனுக்கு தெரிவித்திருந்தார். பெத்தானி கர்ப்பமடைந்துள்ளமை குறித்து அவரின் கணவர் அடம்ஸும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பெத்தானி ஹமில்டன் தனது சுயசரிதை நூலை 2004ஆம் ஆண்டில் வெளியிட்டார். இதனை மையமாகக்கொண்டு சோல் சேர்பர் எனும் திரைப்படமொன்று 2011ஆம் ஆண்டு வெளியாகி பெரு வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment