Wednesday, 11 February 2015

’கும்கி’ நடிகை சினிமாவை விட்டு விலகியதுக்கு வீடியோ தான் காரணமா..?


சமீபத்தில் இந்த நடிகைக்கு என்னாச்சு.. என்னாச்சு என்று பதறிப்போனார்கள் ரசிகர்களும், ஒரு சில திரையுலக பிரபலங்களும். காரணம் கோலிவுட்டின் லக்கி நடிகையாகவும், ராசி நடிகையாகவும் வலம் வந்த லட்சுமிக்கரமான நடிகை சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று சொன்னது தான்.
அவர் சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்த போறேன் அதுக்கு அப்புறம் தான் சினிமாவுக்கு வருவேன், ஆனால் நடிப்பேனா என்று தெரியவில்லை என்று கூறினார். எல்லோரும் தீடீரென்று இந்த நடிகைக்கு என்னாச்சு.. நல்லாதான் நடிக்கிறார்.. நல்லா சம்பாதிக்கிறார்.. பட வாய்ப்புகளும் இருக்கிறது, இருந்தும் ஏன் இப்படி சொன்னார் என்று குழம்பிப்போய் இருந்தனர்.
இந்நிலையில் தான் ஒரு ரகசியம் கசிந்திருக்கிறது. அவர் அவ்வாறு சொன்னதுக்கு காரணம் பிக்கப் டிராப் நடிகர் தானாம். ஆமாம் சமீபத்தில் மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு ஒன்றில் லட்சுமிக்கரமான நடிகைக்கு கொக்கி போட்டாராம் பிக்கப் ட்ராப் நடிகர். எப்படியோ இருவருக்குள்ளும் தீ பற்றிக் கொள்ள, டேட்டிங் போனார்களாம்.
அப்போது அந்தக் கருமத்தை யாரோ செல்போனில் வீடியோவாக எடுத்து விட்டதாக ஒரு கொடுர குண்டை போடுகிறார்கள் கோடம்பாக்கத்தில். இதனால் தான் சினிமாவை விட்டே விலகுவதாக அந்த நடிகை அறிவித்தாராம். அதோடு இனிமேல் நான் சினிமாவுக்குள் வந்தாலும் காஸ்ட்யூம் டிசைனராக வருவேனே தவிர தப்பித் தவறி கூட நடிகையாக மாட்டேன் என்று கூறி விட்டாராம்.

No comments:

Post a Comment