Wednesday, 11 February 2015

கத்ரீனாவின் உண்மை முகம்..!


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைஃப்.
பாலிவுட்டின் செக்ஸியான நடிகை என்று வர்ணிக்கப்படும் இவர் மாஸ் ஹீரோயினாக இருந்தாலும் எந்த விதமான அலட்டலும் இல்லாதவராம். இவரிடம் சென்று யாராவது நீங்க பெரிய ஸ்டார் என்று சொன்னால் நான் அப்படிலாம் இல்லை, மக்களுக்கு பிடிச்ச மாறி இருக்கனும்னு நினைச்சேன் அவ்வளவுதான் என்று கூறுகிறார்.
பொதுவாக நடிகைகள் என்றால் ஒரு படத்தில் நடித்தாலே போதும் சொல்லத்தேவையில்.. அதிலும் பாலிவுட் ஹீரோயின் என்றால் சொல்லவா வேண்டும். ஆனால் அவர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டிருக்கிறாராம் கத்ரீனா....
இது குறித்து அவர் கூறுகையில், என்னை எல்லோரும் பெரிய ஸ்டார் அந்தஸ்தில் வைத்துப் பேசுறாங்க. நான் அப்படியெல்லாம் திட்டமிட்டு வரலை. மக்களுக்குப் பிடித்த, புகழ்பெற்ற ஒரு பெண்ணாக இருக்கணும்னு நினைச்சேன். நான் எந்த அளவுக்கு புகழ் பெற்றிருக்கேன்னு எனக்குத் தெரியல. ஆனா ஹேமாமாலினி மாதிரி புகழ் பெறணும்கிற ஆசை இருக்கிறது என்று அடக்கத்துடன் சொல்கிறார்.
நிஜத்தில் காதலும், கல்யாண மூடுமாக இருக்கும் கத்ரீனா பிற ஹீரோக்களுடன் நெருங்கி நடிக்கவும் தயங்குவதில்லை. நிஜ வாழ்க்கையோடு அதை சம்பந்தப்படுத்தாம, இரு கேரக்டர்களின் ஈர்ப்பு கெமிஸ்ட்ரியாகத்தான் அதைப்பார்கணும் என்றும் சொல்கிறார்.

No comments:

Post a Comment