Wednesday, 11 February 2015

ஷூட்டிங்கில் மயங்கி விழுந்த பிரபல நடிகை.. டுவிட்டரில் விளக்கம்..!


‘ராஞ்சனா’படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோனம் கபூர். இப்படம் முதலில் இந்தியில் வந்தாலும் அதன் பிறகு தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சோனம் கபூர் தற்போது ’பிரேம் ரத்தன் தான் பாயோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பின் போது சோனம் கபூர் திடீரென மயங்கி விழந்தார். அதிர்ச்சியடைந்த படக்குழுவினர்அவரை மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஓய்வு இல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டடுவருவதால் தான்அவர் மயக்கமடைய காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து சோனம் டுவிட்டரில் தெரிவித்து தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதை வெறுக்கிறேன்… ஊவி என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment