Wednesday, 11 February 2015

புலி படம் எப்போது திரைக்கு வரும்..?


விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
புலி என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் நடிகை ஸ்ரீதேவியும், நான் ஈ சுதீப்பும் நடிக்கிறார்கள்.
இப்படம் விஜய் கேரியரிலேயே இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிவருகிறதாம். சமீபத்தில் விஜய் மற்றும் தம்பிராமையாவிற்கான முக்கிய சீன்கள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன.
அடுத்ததாக புலி படக்குழுவினர் கேரளாவில் படப்பிடிப்பிற்கு செல்லவிருக்கின்றனராம். பிப்ரவரி 21 முதல் ஆரம்பமாகும் படப்பிடிப்பு 15 நாள் முதல் 20 நாட்கள் வரை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளா, தலக்கோணம் என்று படபிடிப்பில் பிஸியாக இருக்கும் ’புலி’ படப்பிடிப்பு விரைவில் முடியும் என்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் எடிட்டிங் அடுத்தடுத்து நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாடல்கள் மே மாதத்திலும், ஜூலையில் படம் வெளிவரலாம் என்றும் சினிமா வட்டாரம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment