Wednesday, 11 February 2015

இப்போதான் ஆனேன் பாஸூ… அதுக்குள்ள கேஸா!??


ஆம் ஆத்மி கட்சி நடந்து முடிந்த டெல்லி தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் சனிக்கிழமை (பிப்.,14), டெல்லி முதல்வராக பதவியேற்கின்றார். இந்நிலையில் அக்கட்சிக்கு வந்த ரூ.2 கோடி நன்கொடை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஆம் ஆத்மியில் இருந்து பிரிந்த கரன்சிங் மற்றும் கோபால் கோயல் என்பவர்கள் அவாம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். இவர்கள், ‘ஆம் ஆத்மிக்கு நன்கொடை அளித்த நிறுவனங்கள் போலியானவை. குறிப்பிட்ட முகவரியில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை’ என்று குற்றம் சாட்டினர்.
எனினும் ’இது கட்சியின் மீது அவப்பெயர் உண்டாக்கும் செயல்’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். தற்போது இது குறித்து விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
வரும் 16ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு ஆம் ஆத்மிக்கு வருமான வரித்துறை கெடு வித்தித்துள்ளது.

No comments:

Post a Comment