Wednesday, 11 February 2015

”காந்திக்கு தேசத் தந்தை என்ற பட்டம் தேவை இல்லாதது”


இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி. உலகம் முழுவதும் அகிம்சையை அறிமுகப்படுத்திய இவருக்கு இந்திய தேசியத் தந்தை என்ற பட்டம் தேவையில்லாதது என்று சொல்லி சர்ச்சையை கிளப்பியுள்ளார் இந்து பரிஷத் அமைப்பின் பெண் தலைவர் ஒருவர்.
புது தில்லியில், அண்மையில் இந்து பரிஷத் அமைப்பின் கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய இவ்வமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராத சாத்வி பிராச்சி ஆர்யா, இந்தியாவின் சுதந்திரத்திற்காக உயிரைத் தியாகம் செய்தவர்களான, பகத்சிங், சவார்க்கர் உள்ளிட்டோரை எண்ணிப் பார்த்தால் காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் தேவையில்லாதது என்றவாறு குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
”சுதந்திரத்துக்கு பின் இந்துமதத்தை விட்டு வெளியேறிய 15 கோடி மக்கள் மீண்டும் தாய்மதம் திரும்பும் வரை இந்துத்வா ஆதரவு அமைப்புகளால் தொடங்கப்பட்ட ”தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி” நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும்."
"தேசத்தந்தை என்னும் பட்டம் காந்திக்கு தேவையில்லாதது. ஏனெனில் சுதந்திரதை அடைவதற்கான உண்மையான தியாகத்தை மற்றவர்கள் செய்தனர். இந்தியா சுதந்திரம் பெற்றதற்கான பெருமை தவறாக காந்தியிடம் சென்றுவிட்டது."
"இந்த பெருமையல்லாம் வீர சவார்க்கருக்கும் பகத்சிங்கையும் சேர்ந்திருக்க வேண்டும். எனக்கும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ்க்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டு இருக்கின்றன."
"ஆனால் இதற்கு நாங்கள் பயப்பட போவது இல்லை. இந்துக்களின் உரிமைக்காக தொடர்ந்து உழைப்போம்.”
தில்லி தேர்தலுக்கு முன் தில்லியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியதும் இவ்வமைப்பு தான் என்று கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment