Wednesday, 11 February 2015

என்னை அறிந்தால் படம் லாபமா, நஷ்டமா.. இல்ல சராசரியா...?


அஜித் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸான படம் ’என்னை அறிந்தால்’.
உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் ஒரு வாரம் முடிந்த நிலையில் சுமார் ரூ 55 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
படம் குறித்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பரவியுள்ளன. படத்தை பார்த்த சிலர் படம் பிரமாதமான வெற்றி என்றும், சிலர் அப்படியெல்லாம் இல்லை... சராசரிதான் என்றும் கூறி வருகின்றனர். இதனால் என்னை அறிந்தால் படம் போட்ட காசை எடுத்துவிட்டதா..? இல்லை எடுத்துவிடுமா..? லாபமா..? நஷ்டமா..? இல்லை சராசரியா..? என்று ஒரு பெரும் குழப்பமே ரசிகர்களிடையே இருக்கிறது.
இதுபற்றி தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் எதுவும் கூறாமல் அமைதி காக்கிறார். ஆனால் படம் உண்மையில் எப்படிப் போகிறது? நன்றாகவே ஓடுகிறது. வசூலும் திருப்தியாக உள்ளது என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 40 கோடி வரை குவித்துள்ளதாம் என்னை அறிந்தால் படம். படத்தின் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது, இது உண்மையிலேயே நல்ல வசூல்தான். வரி போக ரூ 28 கோடி வரை கிடைத்திருக்கிறது. பிற மாநிலங்களில் கேரளா, கர்நாடகாவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் அமெரிக்காவில் 4 லட்சம் டாலருக்கு மேல் வசூலித்துள்ளது இந்தப் படம். ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் ரூ. 90 லட்சமும், இங்கிலாந்தில் ரூ.1 கோடிக்கு மேலும் வசூல் செய்துள்ளதாம். மொத்தமாக சுமார் ரூ 55 கோடிக்கும் மேல் வசூல் செய்து, டீசன்டான வெற்றியைப் பெற்றுள்ளதாம் என்னை அறிந்தால்.

No comments:

Post a Comment