சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றில் விஜய்யை நடிக்க வைப்பதற்கான முயற்ச்சிகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியானது. அப்சரா ராம்குமார் இயக்கியுள்ள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ‘ஒண்ணுமே புரியல’ படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படம் வெளியாவதற்கு முன்பே, ஆங்கிலத்தில் தயாரிக்க உரிமையை வாங்கியுள்ளனர். ‘ஒண்ணுமே புரியல” திரைப்படத்தை கலிபோர்னியாவில் உள்ள பிரபல ஹாலிவுட் திரைப்படக் கம்பெனியுடன் இணைந்து உரிமை பெற்றுள்ள ஜெர்மன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
மேற்கு கலாச்சாரத்திற்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றி அமைத்து, ஆங்கிலத்தில் எடுக்கப்படும் இப்படம் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் 2016-ம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிப்பதற்கு தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ள ஒரு நடிகரை தேடினார்கள் என்று பிறகு விஜய்யை தேர்வு செய்துள்ளார்கள் என்றும் செய்திகள் வெளியானது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேபோல் அஜித்தும் ஓகே சொன்னால் ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை கெளதம் மேனனே இயக்க உள்ளார். இதை அவரே சமீபத்தில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு உள்ளேன். தமிழ் கதாநாயகனை வைத்தே ஹாலிவுட் படத்தை எடுப்பேன். அந்த படத்தில் நடிப்பதற்கு எனது முதல் தேர்வு அஜித்தாகவே இருக்கும். அஜித் சம்மதித்தால் அவரை வைத்து ஹாலிவுட் படத்தை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment