தலைப்பை படித்ததும் பாவனாவிற்கு 9 வயதில் பையனா என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிடாதீர்கள்.. இது படத்தில்.. நடிகை பாவனா எங்கு இருக்கிறார், என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்று அப்போ அப்போ ஏதாவது ஒரு செய்தி வந்து எட்டிபார்க்கும். அப்படிதான் தற்போது ஒரு செய்தி வந்திருக்கிறது.
சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான பாவனா அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. இதனால் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. ஆனால் மலையாளத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த 2௦13ல் பாவனா நடித்த 'ஹனி பீ' படம் 3 கோடியில் உருவாகி, 12 கோடியைத்தாண்டி வசூலித்தது. அதேபோல் போன வருடம் வெளியான 'ஆங்ரி பேபீஸ் இன் லவ்' படம் வெற்றிகரமாக ஐம்பது நாட்களை தொட்டது. இதனால் மலையாளத்தில் ஒரு நல்ல இடத்தை பிடித்துவிட்டார் பாவனா. தற்போது 'ஸ்வப்னத்தேக்கால் சுந்தரம்' என்ற படத்தில் நடித்து வரும் பாவனா ஒன்பது வயது பையனுக்கும் அம்மாவாக நடிக்கிறாராம்.
பொதுவாக இளம் நடிகைகள் அம்மாவாக நடிக்க யோசிப்பார்கள். அப்படி மீறியும் நடிப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அதில் பாவனாவும் ஒருவர். கிருஷ்ணா பூஜப்புரா இயக்கும் இந்த படத்தின் கதை என்னவென்றால்,தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நகரத்தில் அடியெடுத்துவைக்கும் கிராமத்துப்பெண் ஒருத்தி, ஆரம்ப காலகட்டத்தில் திருமண பந்தத்தில் சந்திக்கும் பிரச்சனைகளும், பின்னர் ஒரு குடும்பத்தலைவியாக மாறி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார் என்பதும் தான் மையக்கதை..
இந்தப்படத்தில் கிராமத்துப்பெண்ணாக நடித்திருக்கிறார் பாவனா.. அதுமட்டுமல்ல ஒன்பது வயது பையனுக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார். ஹீரோ வேறு யாருமல்ல, அவருடன் ஏற்கனவே 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தில் இணைந்து நடித்த நம்ம ஸ்ரீகாந்த் தான்.. இது மலையாளத்தில் இவர் நடிக்கும் நான்காவது படம்.

No comments:
Post a Comment