பொலிவியாவில் மூன்றுநாள் கட்டிப் பிடி திருவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. பொலிவியத் தலைநகரான லா பஸ் நகரில், கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த இவ்விழாவின் கடைசி நாளில் மட்டும் சுமாராக 10 லட்சம் பேர் பங்கு கொண்டனராம்.
இந்த விழாவின் போது வரிக்குதிரை உடை அணிந்து வந்த இளைஞர்கள் வருவோர் போவர் அனைவரையும் கட்டிப் பிடித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த விழாவை, லா பஸ் கல்சுரல்ஸ் அஃபெர்ஸ் என்ற அமைப்பு நடத்தியுள்ளது.
வித்தியாசமான இந்த கட்டிப் பிடித் திருவிழா உலக மீடியாக்களின் கவணத்தை பொலிவியாப் பக்கம் திருப்பியுள்ளது. இந்த கட்டிப் பிடி திருவிழாவில் நிபந்தனையும் உள்ளது. என்ன போட்டி என்றால் போட்டியில் பங்கேற்பவர் இந்த ‘ஹக் டே’ அன்று மட்டும் 30,000 ஹக் (அனைப்பு)ஸ் பெற வேண்டுமாம். அதோடு யார் யாரை வேண்டுமானாலும் கட்டிப் பிடித்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் பொலிவிய வாசிகள், அங்கிருக்கும் டிராஃபிக் பிரச்சனை, சாலை மறியல் போராட்டங்கள், உள்நாட்டு பொலிவிய மற்றும் ஐரோப்பியர்களுக்கிடையான மோதல் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனைகளை மறக்கச் செய்யும் ஒரு நாளாக இந்த ‘ஹக் டே’ இருக்கும் என்று இதில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விழாவின் சிறப்பம்சமாக, வரிக்குதிரை போல் ஆடை அணிந்து வந்த இளைஞர்கள் தெருவில் செல்லும் அனைவரையும் கட்டி அனைத்து வாழ்த்து தெரிவிப்பராம்.
இந்த வரிக்குதிரை இளைஞர்கள் யார் என்றால், வாழ்கையில், அதிகம் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு இருந்த இளைஞர்களாம். இந்த ‘ஹக் டே’ மூலம் அவர்களுக்கு தனி புத்துணர்ச்சியும் தெம்பும் கிடைக்கும் என்று ஹேப்பினஸ் கேம்பெயின் கூறுகிறது.
இந்த நாளின் இறுதியில், பொலிவியாவின் பிரபல பாப் ராக் பேண்ட் ஆக்டேவியா கலை நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளது.

No comments:
Post a Comment