என்னை அறிந்தால் படம் ரிலீஸாவதற்கு முன்பு இப்படம் வெற்றிபெற்றால் என்னை அறிந்தால் பாகம் 2 எடுக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருந்தார் இயக்குநர் கெளதம் மேனன். அப்போது அவர் சொன்னதை போலவே படமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றுள்ளது.
இதனால் என்னை அறிந்தால் பாகம் 2-வை எடுக்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது, படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை முடித்து அஜித்திடம் கெளதம் மேனன் கொடுத்து விட்டாராம்.
இரண்டாம் பாகத்தின் கதை என்னவென்றால் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரிக்கும், அவருடைய 15 வயது மகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம்தானாம். கதை குறித்து இறுதி முடிவு அஜித்திடம்தான் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது சிம்பு படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன், அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு பிறகுதான் என்னை அறிந்தால்-2 குறித்து அவர் அதிகாரபூர்வ முடிவு எடுக்ககூடும் என எதிர்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment